பிரான்ஸில் 17 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, பிரான்ஸ் பிரஜைகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இதனால், பிரான்ஸின் பரிஸ் முழுவதும், பொலிஸ் நிலையங்களை குறிவைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு கட்டளையிட்டதைத் தொடர்ந்து, குறித்த இளைஞன் விதிகளை மீறிச் செயற்பட்டமையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளன.
இதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நஹல் என்னும் 17 வயதுடைய இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டமை மன்னிக்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.