எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லாஃப்ஸ் உறுதி

சில வதந்திகள் இருந்தபோதிலும், இலங்கையின் உள்நாட்டு திரவப் பெற்றோலியம் எரிவாயுவின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களில் ஒன்றான லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமானது, இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என உறுதியளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த லாஃப்ஸ் எரிவாயுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய, ஒரு மாதத்திற்குத் தேவையான LP எரிவாயு தற்போது அனைத்து முனையங்களிலும் கையிருப்பில் உள்ளதாக உறுதியளித்தார்.

இதேவேளை, LP எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பில் பேசிய குருகுலசூரிய, குறித்த திருத்தத்தின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படும் என உறுதியளித்ததோடு, உரிய நேரத்தில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மற்றும் LP எரிவாயுவின் கிடைக்கும் தன்மையை பொறுத்தே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ காஸ் லங்காவினால், கடந்த ஜூன் 26 ஆம் திகதியன்று, ஜூலை தொடக்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விலைத் திருத்தத்தைத் தொடர்ந்து, உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படும் என்று அறிவித்தது.

LP எரிவாயு தொடர்பில் எடுக்கப்பட்ட நான்காவது தீர்மானம் இதுவாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply