தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக பார்வையிடக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டும் என தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.
இந்தத் தினத்தன்று, பார்வையாளர்களுக்கு விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்க்கை சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, .
குழந்தைகளின் அறிவைப் வளர்ப்பதற்கான பல திட்டங்கள் பகலில் செயல்படுத்தப்பட உள்ளன.
அன்றைய நிகழ்வுகளுக்கு ஏற்ப, மிருகக்காட்சிசாலையின் சிங்க அடைப்பும் பொதுமக்களுக்கு திறக்கப்படும்.
திருத்தப்பணிகளுக்காக, சிங்க கூண்டுகள் நீண்ட காலமாக மூடப்பட்டு, சிங்கங்கள் தனி இடத்தில் வைக்கப்பட்டன. சிங்கங்களின் கூண்டுகளைச் சரிசெய்த பிறகு, சிங்கங்கள் வாழ புதிய இடம் கிடைக்கும் எனவும் மேலும் அப்பகுதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என என்று பிரேமகாந்த கூறினார். .