அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன ரீதியான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது!

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பல காலமாக பின்பற்றப்பட்டு வந்த இன ரீதியான மாணவர் சேர்க்கை முறையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பல்கலைக்கழக விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை பதியும் நடைமுறை கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த நிலையில், அதற்கு தடை விதித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனுபவங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாம் முற்றிலுமாக ஏற்கவில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும், இன பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும் தீர்ப்பு இதுவாகும் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப், இது தேசத்திற்கு சிறந்த நாள் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply