ஆபிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 – 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்து சர்வாதிகார ஆட்சி நடாத்திய முகமது கடாபியின் மகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்வாதிகாரியான முகமது கடாபி, அந்நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியில், சுட்டு கொல்லப்பட்டதையடுத்து, சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்படுகின்றது.