இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் 2 ஆம் திகதி கிழக்கு மாநிலமான ஒடிசாவில் பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
அப்போது கவிழ்ந்த சில பெட்டிகள், அவ்வழியாக சென்ற மற்றொரு ரயிலில் மோதியது.
இந்த விபத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நூற்றாண்டில் இந்தியாவின் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது பதிவாகியது.
விபத்து நடந்த இடம் வழமைக்குத் திரும்பிய நிலையில், பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இன்னமும் தேடிக்கொண்டிருப்பதாகவும் விபத்தில் இறந்த 50 பேர் பற்றிய விபரங்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.