ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ஒத்தி வைப்பதற்கு மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சூரத் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
வழக்கு குறித்த விசாரணை இன்று குஜராத் உயர்நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் இழப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடையினை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கோடை விடுமுறைக்குப் பின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.