தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை மற்றும் பதின்மூன்று தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார். இந்நிலையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனை, இன விடுதலைக்கான தீர்வுகள் மற்றும் பதின்மூன்றின் நிலைமைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் இந்திய பிரதமருக்கு சக தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளன எனத் தெரிவித்தார்.

குறித்த கடிதம் தொடர்பில் எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், குறித்த கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடிதம் திரும்பி வந்ததும் கட்டாயம் அந்த கடிதம் அனுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply