நாட்டில் மருத்துவ பீட விரிவுரையாளர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு!

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் விரிவுரையாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கை குழு குற்றம் சுமத்தியுள்ளது.

மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல் பல்கலைக்கழகங்களில் புதிதாக நிறுவப்பட்ட மருத்துவ பீடங்களுக்கான இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என சங்கத்தின் அழைப்பாளர் நவீன் தாரக தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகங்களின்  மருத்துவ பீடங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்கள் இந்த ஆண்டு தங்கள் கல்வியாண்டை ஆரம்பிப்பார்கள் எனவும்  அங்கு  பேராசிரியர் பிரிவுகளை நிறுவத் தொடங்கும் திட்டங்கள் எதுவும் இதுவரை இல்லாத அதேவேளை  மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கான கட்டிடம் கூட இல்லை எனவும்  அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே  நாட்டில் மருத்துவக் கல்வி முன்னெடுக்கப்படுவதாக  மாணவர் ஆர்வலர் கவலை வெளியிட்டதுடன் விரிவுரையாளர் பற்றாக்குறைக்கு இன்னும்  தீர்வு காணப்படவில்லை எனவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply