2022 G.C.E சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேற்கத்திய இசைக்கான கேட்புத் தேர்வு எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளின் அடிப்படையிலேயே நடைமுறை பரீட்சைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் எதிர்வரும் காலங்களில் தபால் மூலம் வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேலதிக விசாரணைகளுக்கு 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 என்ற தொலைபேசி இலக்கங்ளுக்கோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.