தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது சினோபெக்

சீனாவின் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனமான சினோபெக், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை செய்பவராக இன்று தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் துணை நிறுவனமான சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனமானது, நேற்று  இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் அமைப்பதற்கும் முதலீட்டு வாரியத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதில் எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, சினோபெக் நாட்டில் 50 புதிய நிரப்பு நிலையங்களை நிறுவவுள்ளது.

சினோபெக் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தினால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இலங்கை முதலீட்டு வாரியச் சட்ட எண். 17 இன் படி, சினோபெக் எனர்ஜி லங்காவின் மேற்பார்வையின் கீழ் 20 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த அனுமதிக்கிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply