மத்திய தென்கொரியாவின் சியோங்ஜு நகரத்தில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர் 13 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, ஆற்று வெள்ளம் சுரங்கப் பாதையின் வெடிப்புப் பகுதியினூடாக சுரங்கப் பகுதிக்குள் புகுந்தது. இதனால் அதன் வழியாகப் பயணித்த மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், 685 மீற்றர் நீளம் கொண்ட குறித்த சுரங்கப் பாதையில் 15 வாகனங்கள் சிக்கியிருப்பதாகவும், சிக்கியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கிட முடியாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையினால் 39 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு என்பன ஏற்பட்டுள்ளதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, , வார இறுதி வெள்ளத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒன்பது பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஓசோங்கின் புறநகர்ப் பகுதியில், பேருந்துக்குள் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிர் பிழைத்த ஒன்பது பேர் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டதாகவும் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.