ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர் பயிற்சி – அச்சுறுத்தல் விடுக்கும் வடகொரியா

கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது.

தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை மேற்கொண்டுவருகின்றன.

இதன்மூலம் 3 நாடுகளும் தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அபாயகரமான ஏவுகணைகளுக்கு எதிரான தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் முத்தரப்பு ஏவுகணை பாதுகாப்பு பயிற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply