கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஸ்ரீலங்கா லெகுமெ மரம் வெயங்கொட, தரலுவ பகுதியில் எவ்வாறு அகற்றப்பட்டது? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பந்துல, மரத்தை அகற்றுவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றிய அரச அதிகாரிகளின் திறமையின் காரணமாகவே மரம் இவ்வளவு விரைவாக அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
விமல் வீரவன்ச, “அமைச்சரே, நீங்கள் எப்படி இந்த மரத்தை வெகு விரையில் அகற்றினீர்கள் என்பது தொடர்பில் விளக்க முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு,அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதனை நிறைவேற்றுவது அரச அதிகாரிகளின் திறமையாகும் என அமைச்சர் பந்துல பதிலளித்தார்.