சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது எனவும் இதனால் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையும் பாதிப்படைவதாகவும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில் , வேட்பாளர்களாக போட்டியிடும் அரச ஊழியர்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து 533 அரச ஊழியர்களும் மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் . அரச சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் , சில அரச ஊழியர்கள் மார்ச் மாதம் முதல் அடிப்படை சம்பளம் மட்டுமே பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறித்த பிரச்சினைகள் அரசு ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிப்பதாகவும் நிரந்தர சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.