இலங்கை யானைகளுக்கு உதவி வழங்கவுள்ள தாய்லாந்து அரசாங்கம் !

இலங்கையில் வாழும் காட்டு யானைகள் மற்றும் ஏனைய யானைகளுக்கு போதிய வசதிகள் இல்லாதமையினால் சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இதேவேளை, யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கான் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலையை நிர்மாணிக்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளார்.

யானைகளுக்கு எவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும்  யானைகளுக்கான வைத்தியசாலையை நிர்மாணிக்க தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காவும்  தாய்லாந்தில் இருந்து சிறப்புக் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினாலேயே அதனை  தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ,   உரிய சிகிச்சையை  பெற்றிருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்க முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply