வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் மரத்தின் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மரபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து இருந்து 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான பெண் தனது வீட்டை அண்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை யாரும் பார்க்காதபடி நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, பணத்தை ஒரு பையில் வைத்து கயிற்றின் உதவியுடன் மேலே அனுப்பிய பின்னர், அவர் போதைப்பொருளை மாடியில் இருந்து கீழே அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மரத்தின் உச்சியில் உள்ள வீடானது நீண்ட தூரத்திலிருந்து அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.