கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் தேவை என்று உலகளாவிய பாதுகாப்பு சூழலின் அச்சுறுத்தல் நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் குணரத்ன, குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது செய்யப்படாவிட்டால், 2019 இல் நடந்த தாக்குதலுக்கு நிகரான அல்லது அதே அளவிலான மற்றொரு தாக்குதல் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறாக தொடர் குண்டுவெடிப்பு இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் அவ்வாறான புனர்வாழ்வுத் திட்டம் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என பேராசிரியர் வருத்தம் தெரிவித்தார்.