வட்ஸ் அப் செயலியில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்

வட்ஸ் அப் செயலியில் ‘இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ்’ எனப்படும் விரைவாக வீடியோ வடிவில் தகவல்களை அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் அந்த வசதியின் மூலம், பயனர்கள் 60 வினாடிகள் வரை வீடியோவை பதிவு செய்து உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே உள்ள குரல்வழி செய்தி அனுப்பும் வோய்ஸ் நோட் போன்று செயல்படுத்தப்பட உள்ள இந்த அம்சம், ஸ்னாப்சற் செயலியில் உள்ள வீடியோ செய்தி அனுப்பும் வசதி போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான வீடியோவாக இல்லாமல் இன்ஸ்டண்ட் வீடியோ மெசேஜ்ஜை வேறுபடுத்த அவை வட்ட வடிவில் காட்டப்படும் எனவும், பாதுகாப்பானதாகவும், தனிப்பட்டவருக்கு பகிர்வதற்கு ஏற்றதாகவும் அவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply