2024ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொவிட் 19க்குப் பிறகு இதுவரை அனைத்துப் பாடசாலை பயிற்சிகளும் திட்டமிட்ட திகதியை கடந்து தாமதமாகி வருகின்ற நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பரீட்சைகளான புலமைப்பரிசில், பொதுத் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தி முடிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமிதா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரையில் நடத்தப்படுவதுடன் புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதியும், 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 2024 இறுதியிலும் நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.