ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் மேற்கொண்டுவரும் உக்ரைன், அதில் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகினால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர் விடுத்த அறிக்கையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான யுத்தம் வலுவடைந்து வருவது தொடர்பில் தெரிவித்தார்.
நேட்டோ ஆதரவுடன் உக்ரைன் தனது தாக்குதல்களை அதிகரித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.