பாட்டலி சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமரசிறி பண்டித, இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட இதேபோன்ற மற்றுமொரு வழக்கு தொடர்பில் பிரதிவாதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை விசாரிப்பதைத் தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பித்ததாக பிரதிவாதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த வழக்கு தொடர்பான மற்றுமொரு மேன்முறையீட்டு மனுவை முன்னாள் அமைச்சர் ரணவக்க தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் உயிர் இழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால், அதன் ஓட்டுநர் சந்தீப் சம்பத் குணவர்தனவுக்கு காயங்கள் மற்றும் விபத்து தொடர்பான ஆதாரங்கள் புனையப்பட்டதாகக் கூறி, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply