LPL இல் தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்தவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

2023 ஆம் ஆண்டுக்கான LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச பாடல் வரி ஒன்றை தவறாக உச்சரித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைக் குறிப்பிட்டு, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர், எந்தவொரு நாட்டின் தேசிய கீதமும் நாட்டின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதனை யாரும் சிதைக்க முடியாது. எனவே, தேசிய கீதம் திரிக்கப்பட்ட இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ஒரு தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்யவோ அல்லது ராப் இசையாக பாடவோ முடியாது. எனவே, சமீபத்தில் நடந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தேசிய கீதத்தைப் பாடுவதற்கு ஒரு நிலையான வழி உள்ளது மற்றும் நிலையான பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கிறது. இந்த போக்கால், எதிர்காலத்தில் நிர்வாணமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

பிரபல பாடகி, உமாரா சின்ஹவன்சா 2023 ஆம் ஆண்டுக்கான LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை பாடும் போது ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்ததால் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அந்த வீடியோவில், ‘நமோ நமோ மாதா’ என்பதற்குப் பதிலாக ‘நமோ நமோ மஹதா’ என உச்சரிக்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

இதன் விளைவாக அனைத்து சமூக ஊடக தளங்களிலும் தற்போதைய ட்ரெண்டிங் மஹதா என்ற ஹேஷ்டேக் உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply