இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் ப்றோட்!

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஏஷஷ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகின்ற நிலையில் இன்றைய போட்டியுடன் தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவட் ப்றோட் ஓய்வு பெறுகிறார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு வெள்ளிக்கிழமை இரவு தீர்மானித்த ஸ்டூவர்ட் ப்றோட், கண்ணீர் சிந்தியவாறு சனிக்கிழமை இரவு தனது ஓய்வை அறிவித்தார்.

‘நாளை அல்லது திங்கட்கிழமை எனது கடைசி கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்’ என்று ப்றோட் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணிக்காக 17 வருடங்கள் விளையாடிவந்த ஸ்டூவர்ட் ப்றோட், கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உத்தியோகபூர்வமாக தனது ஓய்வு குறித்து அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்களில் சக வீரர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு (690 விக்கெட்கள்) அடுத்ததாக 602 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் ஸ்டுவட் ப்றொட் இருக்கிறார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆம் இடத்தில் ப்றோட் இடம்பெறுகிறார்.

இலங்கைக்கு எதிராக 2007இல் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமான ஸ்டுவட் ப்றோட், கடந்த 16 வருடங்களில் 166 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களைப் பூர்த்திசெய்துள்ளதுடன் 3647 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அரங்கில் 2006இல் அறிமுகமான அவர், 17 வருடங்களில் 121 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 178 விக்கெட்களையும் 56 சர்வதேச இருபது 20 கிரிக்கெட போட்டிகளில் 65 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply