சவுதி, குவைத் அரசாங்கங்கங்கள் நடைமுறைப்படுத்திய புதிய சட்டம்

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி  அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசாங்கங்கள் அமுல்படுத்தியுள்ளன.

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள ஹார்ட் ஈமோஜியினை அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசாங்கம் இயற்றியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனையும், 2000 டினார் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதே குற்றத்தைப் புரிந்தால், அபராதம் 3 லட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply