இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் !

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் ஒன்றினை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

குறித்த திட்டம் தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நிலையில் இம்மாதம் 7ஆம் திகதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பொன்றினை வழங்கியுள்ளது.

குறித்த கடன் திட்டம் குறிப்பாக 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர்தர தேர்வினை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே , வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் www.studentloans.mohe.gov.lk என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply