சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறநகரில் எரித்திரியாவை மையமாகக் கொண்ட கலாசார விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்தது.
கலாசார விழாவில் திடீரென சுமார் ஆயிரம் எரித்திரியா அரசாங்க எதிர்ப்பாளர்கள் நுழைந்தனர்.
போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் கலாசார விழா வன்முறையாக மாறி அப்பகுதி புகை மூட்டாக மாறியது.
குறைந்தது 52 பேர் காயமடைந்தனர் என்று சுவீடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயிரம் எதிர்ப்பாளர்கள் திருவிழா மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். காவல்துறையின் சுற்றிவளைப்பைத் தாண்டி, தடிகள் மற்றும் கற்களை அவர்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தி நிகழ்வில் கலந்துகொண்டோர் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் பொலிஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
குறித்த கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.