பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிக்க விசேட செயலி!

பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கென விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகளுக்கு தெரிவிக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதிகளுக்கு திறமையின்மை புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பேரூந்து விபத்துக்கள் வருடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply