வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.

அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய உணவுகள் என்பவற்றை எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 மில்லிலீற்றர் தண்ணீரை- அதாவது 4 போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் தெரிவிக்கையில்,

வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லீற்றர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் பிளேக் ப்ரோபெர்க் தெரிவிக்கையில்,
இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply