சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.

சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத் தலைமையிலான அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இந்த மோதல் இடம்பெற்று வருகின்றது.

உள்நாட்டு போரில் ஜனாதிபதி அசாத்திற்கு ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது. மேலும், ஈரான் ஆதரவு குழுவினர் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் சிரியா-இஸ்ரேல் எல்லையோரம் இருந்தவாறு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை தடுக்க சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சிரியா பாதுகாப்புப் படையினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் மேலும் படுகாயமடைந்துள்ளனர்.

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply