அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த சூறாவளி புயல், தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை தாக்கியுள்ளது.
பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.