இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புகள் மீதான சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்புப் பொறுப்புகளுக்கும் பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ கையிருப்பு விகிதம் 200 அடிப்படைப் புள்ளிகளால் 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் ஆகஸ்ட் 16 திகதி முதல், இருப்பு பராமரிப்பு காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.