எச்.ஐ.வி தோற்றாளர்களுக்கான புதிய சிகிச்சைமுறை!

எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க ப்ரெப் என்ற புதிய சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் புதிய சிகிச்சை முறை குறித்தும் தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன கருத்துத் தெரிவித்தார் .

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தரவுகளை சேகரித்து சோதனை செய்வதாகவும் , மற்ற ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எச்.ஐ.வி தொற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022 இல், புதிதாக 48% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் . 2021ல் கொவிட் பிரச்சினையால் பலர் பரிசோதனை செய்ய வராதமையே குறித்த அதிகரிப்புக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டை விட எச்.ஐ.வி தொற்று அதிகரித்ததா அல்லது குறைந்துள்ளதா என்பதை இந்த ஆண்டின் இறுதியில் பார்க்கக்கூடிய அதேவேளை 2023 இன் முதல் காலாண்டில், 165 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை ஆண்களுக்கே இருந்ததாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி அபாயத்தில் உள்ளவர்களுக்கான சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளதாகவும் ப்ரெப் சிகிச்சையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 STD எச்.ஐ.வி மையங்களில் பெறலாம் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply