இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

நேற்று, அவருக்கெதிரான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதால், முன்னாள் தேசிய அணி வீரருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

38 வயதான அவர், 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் முதல் பதிப்பில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை டுபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது போட்டிகளை ‘ஃபிக்ஸ்’ செய்ய தூண்டினார்.

லங்கா பிரீமியர் லீக் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் டிசம்பர் 17, வரை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

2020 இல் சசித்ர சேனாநாயக்க, லங்கா பிரீமியர் லீக்கின் முதல் பதிப்பில் பங்கேற்கும் இரண்டு டுபாய் கிரிக்கெட் வீரர்களைத் தொடர்பு கொண்டு, ஆரம்ப எல்பிஎல் போட்டியில் ஊழல் நடைமுறைகளுக்கு அவர்களைத் தூண்டியதாக ஒரு ஊடக அறிக்கை குற்றம் சாட்டியது.

எவ்வாறாயினும்,அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அதே நேரத்தில் அவை தன்னை அவதூறு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று அவர் தெரிவித்ததோடு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கடுமையாக மறுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply