அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோமீற்றர் தொலைவிலும், 516 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply