
ஹட்டனில் வீசா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களூர் பகுதியில் இருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஹட்டனில் பஸ் நிலையத்துக்கு அருகில் கடையொன்றை வாடகைக்கு பெற்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய வீசா காலவாதியாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.