
அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமையவே ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ. திலகரட்ன தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவை அடுத்து பொதுஜன பெரமுன கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடமான இடத்தை ஜீவன் தொண்டமானுக்கு வழங்க அந்த கட்சி தீர்மானித்தது.
எவ்வாறாயினும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எவ்வித காரணமும் இன்றி ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.