கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அவர் இன்று காலை ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
ஒரு கிலோ கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 16 ரூபாயிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த தீர்மானம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வழிவகுக்காது என்றும், கோதுமை மா மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் எனவும் அவர் உறுதியளித்தார்.