
நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தாக்கம் காரணமாக அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத மின் கட்டண பட்டியலுக்கான தொகையே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களிலும் அறவிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அரசாங்கம் மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.