
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணிக்கு மார்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.