
இறப்பருக்கு சாதாரண விலையினை பெற்றுக்கொடுப்பதோடு உள்நாட்டு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொழிலற்றவர்களை இத்தொழிலிற்கு ஈர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் அமையுமென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பொதுஜன முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.