நில்வலா ஆறு, குடா கங்கை மற்றும் ஜின் கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கையை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் களு ஆற்றின் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெலிவிட்டிய திவித்துர, பத்தேகம, நியகம, நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய மற்றும் போபே பொத்தல பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள ஜின் கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் மற்றும் பிரதேசங்களில் வசிப்பவர்கள் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.