இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் .
பகுதிநேர கற்கைநெறிகளாக நீரியல் வளர்ப்பு மற்றும் நீரியல்வள முகாமைத்துவ தேசிய டிப்ளோமா (National Diploma in Aguaculture & Aquatic Resource Management – NVQ Level 5 ) , கடலுணவு தொழிநுட்ப தேசிய டிப்ளோமா (National Diploma in Sea Food Technology – NVQ level 5 ), கடலக ஏற்பாட்டியல் மற்றும் முகாமைத்துவ தேசிய டிப்ளோமா (National Diploma in Maritime & Logiostics Management – NVQ level 5 ) ஆகிய கற்கை நெறிகளும் , முழுநேர மற்றும் பகுதிநேர கற்கை நெறிகளாக நீரியல் வளர்ப்பு தொழிநுட்பவியலாளர் (Aquculture Technician – NVQ level 4 ) வெளியிணைப்பு இயந்திர பொறிமுறையாளர் (Outboard motor mechanic NVQ Level 3) ,கடலக மாலுமி (Fishing Vessel Skipper – NVQ Level 3/4) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலாளர் (Information & Communication Technology Technician – NVQ Level 4 ),அலங்கார மீன்வளர்ப்பும் முகாமைத்துவமும் (Ornamental Fish Culture & Management ),நீச்சல் பயிற்சிநெறி (Swimming ),கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதித்தொடர்பாடலும் (Marine Chart Reading Communication & Operation Of Satellite Navigator ) ஆகிய பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. .
படகினை செலுத்துவதற்க்கான அனுமதிப்பத்திரத்தினை (Coxwains License ) பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு கடலக மாலுமி பயிற்சிநெறியானது பயனுள்ளதாக அமையும்.
இதேவேளை க.பொ.த சாதாரணதரம் , உயர்தரம் தோன்றியவர்கள் மற்றும் துறைசார் ஆர்வம் உடையவர்களும் இக்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கமுடியும்.
மேலும் இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய தொழிற்தகைமை சான்றிதழினை (NVQ Certificate ) பெற்றுக்கொள்ளமுடியும் .
மேற்படி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் தபால்மூலமாகவோ அல்லது நேரிலோ இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் பெற்று 25 .10.2023 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .