அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்கும் விற்பனையாளர்கள் மற்றும் இருப்புக்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி , 1977 என்ற ஹொட்லைன் மூலம் புகார்களை சமர்ப்பிக்கலாம்.
இதற்கிடையில், அத்தகைய விற்பனையாளர்களைத் தேடி அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
அரிசியின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டின் படி சிவப்பு அல்லது வெள்ளை நாட்டு அரிசி இரண்டையும் 100 ரூபாய்க்கு மேல் விற்க முடியாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 260ரூபாவாகவும் , சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230ரூபாவாகவும் , மற்றும் சிவப்பு அல்லது வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 210 ரூபாவாகவும் விற்பனை செய்யமுடியும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் மற்றும் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் ஏறக்குறைய ஒரு மாத காலமாக கீரி சம்பாவின் தயாரிப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் சந்தையில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.