தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம், தேர்தலை நடத்தாமல் தொடர்வது, நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடியை ஏற்படுத்தியுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானத்தில் எல்லை நிர்ணய குழுவின் தாக்கம் இல்லை என தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த தேசப்பிரிய, இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னரோ அல்லது அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னரோ தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலை விரைவில் நடத்த முடியாது, தாமதிக்கவும் முடியாது இது 2024 செப்டம்பர் 17 இல் இருந்து அக்டோபர் 17க்கு இடையில் நடைபெற வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.