
அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக நேர கடமைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டுள்ளனர், இதனால் புற்றுநோயாளிகள் துயரத்தில் உள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்படும் வரை, அபேக்ஷா வைத்தியசாலையில், மேலதிக நேர கடமைகளுக்குத் திரும்பப் போவதில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.