சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அனைவரும் சம உரிமையுடனும் அமைதியாகவும் வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய இமயமலைப் பிரகடனம் ஒன்றினை கையளித்துள்ளனர்.
குறித்த பிரகடனமானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.