கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் நிர்மாண செலவு 825 மில்லியன் ரூபா எனவும் கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் செலவு வருடாந்தம் 20 இலட்சம் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.