இலங்கைக்கும் துர்க்கியேவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் விசேட நினைவு தபால் முத்திரை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் துர்க்கியே என்பது குறிப்பிடத்தக்கது.
10 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் எமது தூதரகத்தை நிறுவியதன் மூலம் எமது உறவு ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது, இது உண்மையில் எமது வளர்ந்துவரும் மற்றும் செழித்துவரும் கூட்டாண்மைக்கு உண்மையான சான்றாக விளங்குகின்றது என இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைதீவிற்கான துர்கியே குடியரசின் தூதுவர் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்புகளைப் போலவே, நினைவு தபால் முத்திரையின் பக்கங்களின் வடிவமைப்பு மற்றும் அலங்காரங்கள் சிகிரியா மற்றும் துர்கியேவில் உள்ள கப்படோசியாவின் சின்னமான பகுதிகளைக்கொண்டுள்ளது.