இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட சட்டவிரோத வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்ட மண்டபத்தை அண்மித்த வேதாளை கடற்கரையில் இருந்து, சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படையினரால் நேற்றையதினம் நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட படகு மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பியதால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை மாத்திரம் பறிமுதல் செய்ததுடன் இந்திய காவல் படை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாவாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply